Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்…. வேலையாட்களைக் கண்காணிக்க புதிய ஆப்…. வெளியான தகவல்….!!!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்களின் வருகை பதிவு கணக்கிடுவதற்கு மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அல்லது நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் என்ற உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு அரசின் குறைந்த ஊதியத்துடன் நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்பு திறன் இல்லாத உடலுழைப்பு சார்ந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். தற்போது கொரோனா வந்த பிறகு கிராமப்புறங்களில் இந்த திட்டத்தில் இணைந்து வேலை செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருகைப்பதிவு போன்றவற்றை கண்காணிக்க மொபைல் மானிட்டரிங் ஆப் பயன்படுத்துவதாக அரசுத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மொபைல் மானிட்டரிங் ஆப் மூலமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதை வைத்துக் கொண்டு நம்மால் பணியாளர்களை நேர வருகைப் பதிவை எடுக்க முடியும்.

இந்த செயலி அறிமுகம் செய்வதற்கு முன்னரே இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடம் கருத்து கேட்கப்பட்டது. இவற்றின் பயன்பாடுகள் குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. இதன் மூலம் பணியாளர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். 2021 மே மாதத்தில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரால் தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள் செயலி மற்றும் பகுதி அலுவலர் கண்காணிப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

Categories

Tech |