Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“100 நாள் வேலைய 200 நாட்களாக மாத்துங்க”…. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் தலைமை தாங்கியுள்ளார். இதனை ஒன்றிய செயலாளர் தொடங்கி வைத்தார். அதன்பின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து திருப்பூண்டி காரைநகர் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் சாலையை சீர் செய்து தார் சாலையாக மாற்ற வேண்டும் என்றும், மலாக்கா பள்ளி தெருவிலுள்ள குளத்தில் சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டுமென்றும், திருப்பூண்டி கடைத்தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |