இந்தியா முழுவதும் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேலையில் சேர விரும்பும் தகுதியுள்ள கிராமப்புற மக்கள் சிலருக்கு இந்த வேலை வழங்கப்பட்டு சம்பளமும் கொடுக்கப்பட்டு வந்தது. முதலில் குறைந்த அளவு மக்களே இந்தத் திட்டத்தில் வேலை செய்து பயன் பெற்று வந்தனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அதிக அளவு மக்கள் இந்த வேலையில் சேர்ந்ததால் அதிக அளவு சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை வந்தது. அதோடு கொரோனா பரவலால் அரசுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணமாகவும் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் செய்த வேலைக்கான சம்பளத் தொகை ஒழுங்காக வரவில்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.