Categories
அரசியல்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் : அரசு வெளியிட்டுள்ள ஷாக் நியூஸ்…!!

மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். கடந்த 2022-23ஆம் ஆண்டுக்காண 100 நாள் வேலைத் திட்டத்துக்கு 73000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயனாளியின் பெயரை பதிவு செய்து இடைத்தரகர்கள் பலர் பணத்தை பெறுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலம் தான் கொடுக்கப்படுகிறது எனவும், அதோடு அவ்வாறு கொடுக்கப்படும் இடங்களில் இடைத்தரகர்கள் அதிக அளவில் பணத்தை கையாடல் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சில விதிமுறைகளை கடுமையாக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |