Categories
மாநில செய்திகள்

100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்…. உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!?

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது. அப்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விருதுநகர், திருச்சுழி, தர்மபுரி ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி, மானூர் ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு, கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப் பிரிவு தொடங்கப்படும் என்றும் வெவ்வேறு பிரிவுகளில் 100 பாடப்புத்தகங்கள் ரூபாய் 2 கோடி மதிப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பி.காம் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக் கழகங்களுக்கு புதிய மண்டல மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், அண்ணாமலை பல்கலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |