நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மே 2ஆம் தேதி தான் வாக்கு எண்ணப்படும். சில மாவட்டங்களில் இருந்து ஒன்னாம் தேதி தபால் வாக்கு என்னப்படும் என்று தகவல் வந்தது. பொதுவாக என்ன நடைபெறும் என்றால்…. இரண்டாம் தேதி தான் தபால் வாக்கு எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணுவதற்கு முன்னாடி சீப் ஏஜென்ட், வேட்பாளர்கள் முன்னிலையில் வைத்து, அந்த ஸ்டிராங் ரூம் ஓபன் செய்து, அதன் பிறகு டேபிள் போட்டு பிறகுதான் கவுண்ட் செய்வார்கள். ஆனால் ஒன்றாம் தேதியே தபால் ஓட்டுக்களை எண்ணுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இருந்து தகவல் வருகின்றது. ஒரு மாவட்டங்களில் இருந்து கருத்து வருகிறது என்றாலும் அந்த கருத்தின் அடிப்படையில் நாம் தகவல் கொடுக்கிறோம். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையரை பொறுத்தவரை முழுமையாக அறிவுரை வழங்குகிறேன் என்று சொல்லி இருக்கிறார். நிச்சயமாக அவரும் தெளிவாக இருக்கிறார். ஏனென்றால் சட்டம் தெளிவாக இருக்கிறது. எனவே சட்டம் தெளிவாக இருக்கிறது, தேர்தல் ஆணையமும் தெளிவாக இருக்கிறது, அதை பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.
எங்களைப் பொறுத்தவரை சொல்கிறேன் தேர்தல் ஆணையம் எந்த ஒரு கிஞ்சித்தும், வந்து எவரும் குறை சொல்லாத அளவிற்கு முழுமையாக தன் கடமையை செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பல்வேறு குறைகள் சொல்லி இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. 100 சதவீதம் அளவிற்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகள் , அதே போன்று எல்லா வசதிகளையும் கொண்டு எந்த விதமான குற்றச்சாற்றுக்கு இடம் கொடுக்காத வகையில் தான் கவுண்டிங் இருக்கவேண்டும். கவுண்டிங் சென்டர் இருக்கவேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலையை நாங்கள் சொல்லி இருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.