Categories
தேசிய செய்திகள்

100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு…. சர்வதேச அளவில் இடம் பிடித்த ரிலையன்ஸ் அதிபர்…!!!

உலக அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

உலக அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். தற்போதைய தகவல்களின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஆகும்.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 7 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என புளூம்பெர்க் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி(வயது 64) தற்போது இந்தப் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். பங்குச்சந்தை நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |