பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவருக்கு செல்போன் இலவசமாக வழங்கி யுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அதன்பிறகு மக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நடிகர் சோனு சூட் உதவி செய்தார். தற்போது சோனு சூட் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் லைட்மேன்கள், டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 100 பேருக்கு இலவசமாக செல்போன்களை சோனு சூட் வழங்கியுள்ளார். அதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.