நாட்டில் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளில் 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி விநியோகத்திற்கான மத்திய அரசின் விரிவான திட்டத்திற்கு வழக்கமான தடுப்பூசி மையங்களை காட்டிலும் பெரிய அறைகள் தேவைப்படுவதால், முதலில் சமூக நலக்கூடங்களை பயன்படுத்தவும், பிற்பகுதியில் தனி கூடாரங்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசி மையங்களில் ஐந்து நபர்கள் பணியமர்த்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்ட அவர்களுக்கான பக்க விளைவுகள் குறித்தும் அங்கேயே தனியறையில் கண்காணிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.