செய்தியளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில அரசு நிதியிலிருந்து மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகள், அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிராக என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்பு சகோதர்களே மருத்துவ கல்லூரி அனுமதி கொடுத்து ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால் அரசு மருத்துவக்கல்லூரி என்றால் அதற்கு வடகிழக்கு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு செய்கிறது. 40 சதவீத நிதி உதவி தான் மாநில அரசு செய்கிறது. இதை நான் குறிப்பிட்டேன். அதை போல ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த நீட் தேர்வு வந்த வரலாறு என்பது பல்வேறு முறை ஆண்டு கணக்காக விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். இது ஏதோ பாரதிய ஜனதா கட்சியினுடைய செயல்திட்டத்தில் இருந்து அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பின்பாக புதிதாக உருவாக்கப்படவில்லை. யு.பி.ஏ அரசாங்கம் இருக்கின்றபோது 2013-ல் இருந்து தொடங்கப்பட்ட இதன் முன்முயற்சிகள் அத்தனையும் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசாங்கத்தினால் தான் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுக்க நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சமூக நீதிக்கு நீட் தேர்வு எதிராக இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். தீர்மானத்தில் கூட அந்த வார்த்தைகள் எல்லாம் இருக்கு. 110 விதியின் கீழ் என்று சொன்னார்கள். சமூகநீதி தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அமையப்பட்டது. இட ஒதுக்கீடு 69 சதவீதம் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 2020 ஆம் வருடத்திற்கான நீட் தேர்வு முடிவுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடைய இட ஒதுக்கீட்டு இடங்களை விட அதிகமான இடங்கள் அந்த குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன இட ஒதுக்கீடு பெறுகிறார்களோ அதைவிட அதிக எண்ணிக்கையில் பெற்றிருக்கிறார்கள்.
பட்டியல் இனத்தை சார்ந்த மாணவர்கள் என்ன இடங்களை பெற வேண்டுமோ அதை விட அதிக இடங்களில் பெற்றிருக்கிறார்கள். ஆக இட ஒதுக்கீடு நீட் தேர்வினால் பாதிக்கப்படுகிறது என்பது முழுக்க 100% உண்மைக்கு புறம்பான ஒன்று. இங்கே இருக்கக்கூடிய தரவுகளை வைத்து இட ஒதுக்கீடு நீட் தேர்வினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை, சமூகநீதிக்கு எள்முனை அளவு கூட நீட்டினால் இல்லை என தெரிவித்தார்.