Categories
தேசிய செய்திகள்

100% மானியத்தில் மீன் வளர்க்கலாம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. உடனே போங்க….!!!!

மீன் வளர்ப்பு தொழிலுக்கு முழு உதவியும் வழங்கும் மத்திய அரசு திட்டம் ஒன்று அமலில் உள்ளது. மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் மூலமாக வருமானத்தை பெருக்குவதற்கு மத்திய அரசு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை படுத்துதல் ஆகிய வற்றை மேம்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம். அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. மீன் உற்பத்தி தொழில் மூலம் பணம் சம்பாதிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் மீன் பிடிப்பு, மீன் வளர்ப்புஉள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குகின்றது. இதில் மத்திய அரசு திட்டம், மத்திய அரசு ஆதரவுடனான திட்டம் என இருவகை திட்டங்கள் உள்ளன. முதல் திட்டத்தில் மொத்த செலவும் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை. இரண்டாவது திட்டத்தின் மொத்த செலவில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும். இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் பயன் பெறலாம்.

Categories

Tech |