Categories
தேசிய செய்திகள்

100 மீட்டர்…. வெறும் 49 வினாடிகள்…. 80 வயதில் சாதனை படைத்த பாட்டி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் 100 மீட்டரை கடந்து இருக்கிறார். பாட்டி சரியாக இறுதிக்கோட்டை கடக்கும் வரை ஷாருக்கான் நடிப்பில் வந்த சக்தே இந்தியா படத்தின் பாடலை ஒலிக்கச்செய்து அவரை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர்.

அந்த 80 வயது மூதாட்டியின் பெயர் பிரிதேவி பரலா ஆகும். மீரட்டிலுள்ள வேத் இன்டர்நேஷனல் பள்ளியில் முதுநிலை தடகள சங்கத்தின் கீழ் நடந்த முதல் முதுநிலை மாவட்ட தடகளப் போட்டி 2022ல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |