Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“100 யூனிட் மின்சாரம் கூட பயன்படுத்தாத குடும்பம்” ரூ.‌ 94,000 பில்லால் அதிர்ச்சியில் கூலி தொழிலாளி….!!!!

மின் கட்டண பில்லால் கூலி தொழிலாளி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி அருகே மல்குத்திபுரம் தொட்டி என்ற கிராமத்தில் ரேவண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேவண்ணா தன்னுடைய மனைவி பெயரில் மின் இணைப்பு பெற்று 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைக் பயன்படுத்துபவர்களுக்கு மின்கட்டணம் கிடையாது என்பதால் ரேவண்ணா இதுவரை மின்கட்டணம் செலுத்தியதே கிடையாது.

இந்த சூழலில் திடீரென ரேவண்ணாவின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி சத்தியமங்கலம் கோட்ட பொறியாளர் விசாரணை மேற்கொண்டதில் மின்சார  மீட்டர் கணக்கெடுப்பில் கூடுதலாக காட்டியதும் தற்போது அது சரி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த தகவலை ரேவண்ணாவிடம் கூறிய பிறகு சற்று நிம்மதி அடைந்தார்.

Categories

Tech |