நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் பொது வை-பை வசதியை டெல் ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பொது வை-பை சேவைகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் வாணி என்ற திட்டத்தை ரயில்வே தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 100 ரயில் நிலையங்களில் புது வை பை சேவைகளை பயன்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதத்துக்குள் வைபை வசதியை மொத்தம் 6 ஆயிரத்து 102 ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைஃபை சேவை வசதியை டெல் ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புனித் சாவ்லா காணொலி வாயிலாக இந்த வசதியை அறிமுகப்படுத்தினார். எனவே ரயில் நிலையங்களில் மக்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.