இந்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பணத்தை சேமிக்கும் விதமாக public provident fund திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூபாய் 15 லட்சம் ஆகும். இந்த public provident fund திட்டத்தில் ரூபாய் 100 செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு நிதி ஆண்டில் 500 ரூபாய் செலுத்தினால் கூட போதும். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் 2 முறை இந்திய அரசால் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதில் வட்டி விகிதம் மேல்நோக்கி இருக்கும் போது உங்களுடைய முதலீட்டிற்கு பலனளிக்கும். இந்தத் திட்டத்தில் வரிச் சலுகையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது முதலீடு செய்யப்பட்ட தொகை சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வு தொகை ஆகிய மூன்றுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அதிக வட்டி மற்றும் வரிச் சலுகை என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் Lock-in பீரியட் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் முதலீடு செய்த தேதியிலிருந்து உங்களுடைய முதலீடு காலம் முடியும் வரை அந்த தொகையிலிருந்து நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் மற்றும் பகுதியளவு பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டத்தை ஒரு சிலர் வரி சலுகைகளுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தவறான விஷயம். இந்த திட்டம் சிறிய முதலீட்டில் இருந்து தொடங்கப்படுவதால் அனைத்து மக்களுக்கும் ஓய்விற்குப் பிறகு நிரந்தர வருமானம் வருவதற்கு உதவும்.