100 வருடங்களுக்கு முன்பு முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த பில்டர்கள் முதல் உலகப் போரில் பயன்படுத்திய ஜெர்மனி பீரங்கியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீரங்கியானது இறுதியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4000 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்டாரியோ விலுள்ள அம்ஹர்ஸ்ட்பர்க்கில் பழைய பேஸ்பால் மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தின் அடியில் கட்டுமான குழுவினர் Feldkanon 96 என்ற பீரங்கியை கண்டறிந்துள்ளனர்.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இந்த ஆயுதமானது போர் கருவியாக இருந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பீரங்கி துப்பாக்கியானது அதன் கடைசி வகைகளில் ஒன்றாகும். மேலும் தற்போது ராணுவ வரலாற்று நிறுவனங்கள் பல உதவ முன்வந்துள்ளதால் மண்ணிற்குள் பல வருடங்களாக புதைந்து கிடந்துள்ள துருப்பிடித்த FK-96 கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.