Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… துணை ராணுவ படையினர்-காவல்துறையினர்… கொடி அணிவகுப்பு..!!

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பெரம்பலூரில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கர்நாடகா மாநிலம் சித்திரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் சார்பில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவ வீரர்கள் நேற்று மாலை கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தின் அருகிலிருந்து தொடங்கியது.

இந்த அணிவகுப்பை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தொடங்கி வைத்தார். அணிவகுப்பில் பாதுகாப்பு கவசங்களுடன் துணை ராணுவப்படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பதற்றமானவை என கண்டறியப்பட்ட பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |