Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

100% வாக்குபதிவு வேண்டும்…. வாக்காளர் அட்டையை பதிவிறக்க எளிய வழி…. ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குகளை பெற அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.இதில் ஒரு பங்காக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இந்த ஆண்டு புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்த நபர்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது .

 

இந்த முகாமில் வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .மேலும் இது வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |