Categories
தேசிய செய்திகள்

100 100… இதில் ஒரு கோடு தான் போட வேண்டும்… ஆனா’டூ ஹன்ட்ரட்’ வர வேண்டும்… இதற்கு விடை உங்களுக்கு தெரியுமா..?

சமூகவலைத்தளங்களில் ஒரு புதிர் கணக்கு வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

எப்பொழுதுமே புதிர் கணக்கு என்றால் நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். அந்த புதிரை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக நாம் அதிக அளவு யோசிப்போம். பல இடங்களில் நமக்கு புதிருக்கான விடை கிடைக்கும். சில நேரத்தில் இதற்கான விடை கடைசிவரை கிடைக்காது. தற்போது டிக்டாக்கில் ஒரு புதிர் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு நோட்டில் 100க்கு 100 என ஒன்றின்கீழ் ஒன்று எழுதி, அதில் கீழ் ஒரு கோட்டை போட்டு டூ ஹன்ட்ரட் வர வேண்டும் என அவர் கூறுகிறார். அதற்கு அருகில் இருந்த மூன்று பேரும் புதிரை போடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியை கொடுத்து புதிருக்கான விடையைகொடுக்கின்றனர். எந்த விடையும் புதிருக்கான விடையாக அமையவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவியது. யூடியூபிலும் இந்த வீடியோ பரவி இதற்கான விடையை பலரும் கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். 100 என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டுள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது டூ ஹன்ட்ரட் என்பது வர வேண்டும். இதில் டூ ஹன்ட்ரட் என்பது 200 அல்ல. அதற்கு Too 100 என்று அர்த்தம். அதாவது 100 என்ற எண்ணில் 1 என்ற எண்ணிற்கு மேலும் ஒரு கோட்டை போடுவதன் மூலம் ‘Too 100’ என மாறும். தற்போது இதற்கான விடை கிடைத்துவிடும்.

Categories

Tech |