ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் அருகில் 100 வயது கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டின் கால் கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் கூறியது, மூதாட்டி காலில் அணிந்து இருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக மூதாட்டின் கால்களை ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணிக்கு இந்த சம்பவம் குறித்து எனது மருமகளிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது தாயார் ஆபத்தான நிலையில் வீட்டிற்கு வெளியே காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மூதாட்டியின் கழுத்தில் காயங்கள் இருந்தது மற்றும் அவரது கால் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியது, பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சுமார் 100 வயது இருக்கும். மேலும் அவர் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமங்களை எதிர் கொண்டார். கால்கள் துண்டிக்கப்பட்டு நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மிகவும் மோசமாக காயமடைந்தால் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.