செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள்.
இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் . மாவட்ட செயலாளர்களே 4 பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட செயலாளர்களும் ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே, நீங்கள் எல்லாம் ஒரு கட்சி தலைவரா? எடப்பாடியோடு இருப்பவர்கள் தான் தாக்குதல் நடத்தியவர்கள். எங்கள் ஆட்கள் தாக்கவில்லை, தாக்கப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான் எங்கள் ஆட்கள்.
அந்த இடத்தில் இருந்ததனால் எங்களுடைய ஆதரவாளர்களையும் அவர்களுடன் சேர்த்து இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, அந்த வழக்கில் நிச்சயமாக உண்மை வெளிவரும். சசிகலா அவர்கள் எந்த இடத்திலும் ஈபிஎஸ்ஸை பாராட்டி பேசவில்லை, அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, இவர்களை முதலமைச்சராக அறிவிப்பதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சி. அது ஒரு ஆறு, ஏழு நாட்கள் நடந்தது.
அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக எங்கு இருந்தார்கள், அத்தனை பேர் வைத்து என்ன செய்தார்கள் ? அந்த அம்மா எடப்பாடி எதார்த்தமாக நல்ல மனிதனாக இருக்கிறார், காலை தொட்டு கும்பிடுகிறார், குனிச்சி நிக்குறாரு, சினிமாவில் நடிப்பவர்கள் கூட அந்த மாதிரி பண்ண மாட்டார்கள், வடிவேலை விட கெட்டிக்கார நடிகர் போல அப்படியே கும்பிடுகிறார், கண்ணில் தண்ணீர் விடுகிறார், பிறகு தவழ்ந்து காலை தொட்டு கும்பிடுகிறார், காலை நக்கி அப்படியே எழுந்திருக்கிறார்.
அதை பார்த்து என்ன செய்தார்கள் அந்த அம்மா ? இவ்வளவு நல்ல மனிதராக இருக்கிறார் என்று முதலமைச்சராக்கி விட்டார்கள். அப்புறம் தான் அவர்களுக்கு தெரிந்தது பச்சோந்தி, பச்சோந்தி என்றால் பத்து கலர் தான் வரும், எடப்பாடி பழனிச்சாமி நூறு கலர் பச்சோந்தி. அதாவது பாம்பு கடித்தால் தான் விஷம், எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாலே விஷயம் என தெரிவித்தார்.