Categories
மாநில செய்திகள்

100 கோடி ரூபாய் அபராதம்… அமலாக்கத்துறையின் அதிரடி…!!

ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கும் பல கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்துள்ளது.

ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி என்பது வெளிநாட்டு வங்கியாகும். இந்த வங்கியானது, தனது 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் 46,868 பங்குகளை கடந்த 2007, 2011, 2012ஆம் ஆண்டுகளில் வாங்கியது. ஆனால் இது ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்குத் தெரியாமல், நடைபெற்றிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதாவது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பங்குகளை, ஆர்பிஐ மற்றும் அந்நிய முதலீட்டு விதிகளை மீறி வாங்கி குவித்துள்ளது.

இந்த முறைகேடு புகார் தொடர்பாக, ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு 100 கோடி ரூபாய் அபராதமாக வாங்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. 13 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, 100 கோடி ரூபாயும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 17 கோடி ரூபாயும், அந்த வங்கியின் முன்னாள் தலைவரும், மேலாண் இயக்குநருமான எம்ஜிஎம்.மாறனுக்கு 35 கோடி ரூபாயும் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |