Categories
உலக செய்திகள்

100 கோடி தடுப்பூசி தயாரிக்க முடிவு… தீவிரம் காட்டும் குவாட் அமைப்பு… பிரபல நாடு தகவல்..!!

குவாட் நாடுகள் சுமார் 100 கோடி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள “குவாட்” அமைப்பின் முதல் கூட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சுமார் 100 கோடி தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்கா குவாட் நாடுகளின் இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே “வருகின்ற 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 கோடி தடுப்பூசிகளை தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்காக இந்தியாவில் உற்பத்தி செய்ய எங்கள் குவாட் அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் உலக நாடுகளுக்கு அமெரிக்கா இதுவரை சுமார் 11 கோடி தடுப்பூசிகளை வழங்கியிருப்பதாகவும், தாங்கள் கொள்முதல் செய்துள்ள 80 கோடி பைசர் தடுப்பூசிகளையும் நன்கொடையாக இந்த மாத இறுதிக்குள் உலக நாடுகளுக்கு வழங்கவிருக்கிறோம் என்று ஜென் சாகி கூறியுள்ளார்.

Categories

Tech |