பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டவில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய் துள்ளார்.
நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2_வது முறையாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றது. புதிதாக தேர்வாகிய மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதை பாகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் மோடி அரசு ஏதும் செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகின்றது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிடுள்ள ட்வீட்_தில் , மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் 100 நாட்கள் ஆகி விட்டன. எந்த வளர்ச்சியும் இல்லை, நாட்டின் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டடு , ஊடகங்கள் மீதான அடக்குமுறையும் நடைபெறுகிறது. சரியான திட்டமிடல் இல்லாத நிலையில் பொருளாதார சூறையாடல் நடைபெற்று வருகின்றது என்று விமர்சித்துள்ளார்.
Congratulations to the Modi Govt on #100DaysNoVikas, the continued subversion of democracy, a firmer stranglehold on a submissive media to drown out criticism and a glaring lack of leadership, direction & plans where it’s needed the most – to turnaround our ravaged economy.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2019