மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற 100 நாட்கள் சாதனைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
370வது சட்டபிரிவு நீக்கம்:
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி 370 பிரிவை ரத்து செய்தது பாஜக அரசு. 370-வது சட்டப்பிரிவை நீக்கயதன் மூலம் காஷ்மீரில் தொழில் முதலீடுகள் பெருகும் என்றும், இதன்மூலம் தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 77 வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்:
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. நாடு முழுவதும் ஏழைகளுக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு அத்திட்டத்தின் கீழ் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது மத்திய அரசு.
சந்திராயன்-2 முயற்சியை கைவிடமாட்டோம்:
ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சந்திராயன்-2 முயற்சியை கைவிடாமல் மேற்கொண்டு தொடர்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வாகன விற்பனை அதிகரிப்பதற்கான நடவடிக்கை குறித்து தொழில் துறையினருடன் விவாதித்து வருகிறோம் என்றும், வங்கிகள் இணைப்பை செயல்படுத்துவது குறித்து பிரதான வங்கிகள் முடிவு செய்யும் என்றும் மோடியின் 100 நாள் சாதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.