தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே அனல் காற்று வீசி வெளியிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகிஉள்ளதாகவும் தெரிவித்தது.
நேற்று பதிவாகிய வெயிலின் அளவு மற்றும் இடம் :
சென்னை நுங்கம்பாக்கம் – 105.62 டிகிரி
சென்னை மீனம்பாக்கம் – 106.7 டிகிரி
கோவை விமான நிலையம் – 90.32 டிகிரி
கடலூர் – 104.9 டிகிரி
தர்மபுரி – 93.56 டிகிரி
கன்னியாகுமரி – 84.74 டிகிரி
கரூர் – 97.7 டிகிரி
கொடைக்கானல் – 64.4 டிகிரி
மதுரை தெற்கு – 105.8 டிகிரி
மதுரை விமான நிலையம் – 101.84 டிகிரி
நாகப்பட்டினம் – 102.38 டிகிரி
நாமக்கல் – 93.2 டிகிரி
பாளையங்கோட்டை – 91.4 டிகிரி
பரங்கிப்பேட்டை – 103.1 டிகிரி
சேலம் – 95.72 டிகிரி
திருச்சி – 104.54 டிகிரி
திருத்தணி – 107.06 டிகிரி
தூத்துக்குடி – 93.56 டிகிரி
வேலூர் – 105.26 டிகிரி