தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவித்துள்ளது என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.
இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருபக்கம் ஆதரவு போராட்டங்கள் ஆதரவு பேரணி கோலங்களும், மற்றொருபக்கம் எதிர்ப்புப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் பேரணி கோலங்கள் போடுகிற அளவுக்கு இந்த பிரச்சனை மக்கள் பிரச்சனையாக தேசிய அளவில் இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான ஆணவக்கொலைகள் 4 ஆண்டுகளில் மட்டும் அதிகாரப்பூர்வமாக நடந்திருப்பதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் சொல்கிறது. இந்த தேசம் சமூக நல்லிணக்கத்தை அடியோடு புதைத்து விட்டு சமூகப் பிளவை அதிகரிக்கிற ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.