ஹோட்டல் ஒன்றில் 100 கிலோ எடை கொண்டவர்கள் பற்றிய விதிமுறையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரிட்டன் கென்டில் உள்ள போபிட் லயர் காட்டேஜ் என்னும் ஹோட்டல் வித்தியாசமான விளம்பரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்த ஹோட்டலில் 100 கிலோவிற்கு அதிகமான எடை கொண்டவர்களுக்கு தங்க தடை போடப்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்க வருபவர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் அதிக அளவு உணவு சாப்பிடும் பிரச்சினை கொண்டவர்களுக்கு எங்களது ஹோட்டலில் புக் செய்ய வேண்டாம். 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவர்களுக்கு எங்கள் ஹோட்டலில் தங்க இடம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
அதிக எடை கொண்டவர்கள் எங்கள் ஹோட்டலில் தங்கினால் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற காரணத்திற்காகவே இத்தகைய விதிமுறை என்று ஹோட்டல் நிர்வாகம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியதால் சிறிய மாற்றம் விதிமுறையில் செய்யப்பட்டது. அதிகம் உணவு சாப்பிடுபவர்களால் கட்டிடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால் 100 கிலோவிற்கு அதிகமாக உள்ளவர்கள் ஹோட்டலில் தங்க இடம் இல்லை என விதிக்கப்பட்ட விதியை மாற்றி கட்டிடத்தில் அமையப்பெற்றிருக்கும் மரத்தூண்கள் பழமை வாய்ந்தவை எனவே 100 கிலோவுக்கும் அதிக எடை கொண்டவர்கள் அங்கு தங்க முடியாது என மாற்றி அமைத்துள்ளனர்.