Categories
தேசிய செய்திகள்

100 கிலோ இரும்பை திருடிய வாலிபர்கள்….. கொடூரமாக அடித்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரின் பாலம் அருகில் பல இரும்பு கூடாரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக  பெரிய அளவில் இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரை இரும்பு துண்டுகள் திருடப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்துள்ளது அவர்களை துரத்தி உள்ளது. கும்பலை கண்டது இரண்டு பேர் தப்பி ஓடி உள்ளனர். அதன் பிறகு அவர்களை விரட்டி பிடித்து இழுத்து வந்த கும்பல் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்து உதைத்து உள்ளனர்.

இதில் அவர்கள் மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் தகவல் கிடைத்து ஒரு மணி நேரம் கழித்தே‌ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர் என்று கூறப்படுகிறது. மேலும் இரும்பு திருடியவர்கள் 2 பேரும் முசாப்பூர் நகரை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |