ஃபெராரியை நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை குறித்த தகவல்கல் வெளியாகி உள்ளது.
ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை நிறுவனம் தான் என சொல்லும் அளவிற்கு பெயர்போனது இந்நிறுவனம். தற்போது இந்நிறுவனத்தின் புதிய ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.4.02 கோடி என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது.
தற்போது இத கார் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஹைபிரிட் மாடல் அல்லாத கடைசி காராக இது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் புதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி 8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 720 ஹெச்.பி. திறனையும் 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த காரை ஸ்டார்ட் செய்த 2.9 வினாடி நேரத்திற்குள் 100 கி.மீ. வேகத்தையும் 200 கி.மீ. வேகத்தை 7.8 வினாடிக்குள் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிலோ மீட்டர் ஆகும். இந்த கார் பார்ப்பதற்கு முந்தைய 488 மாடலைப் போலவே உள்ளது. எனினும், எஸ்டக்ட் இன்டேக், முகப்பு விளக்கு அமைப்பு, பின்பகுதியில் விளக்கு அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.