நீண்ட வரிசையில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்றிருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்று நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்று. இதையடுத்து 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் அந்த வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டர் முறையை பயன்படுத்தி உள்ளனர். இதனால் சுங்கச்சாவடியில் காகிதம் இல்லாத பண பரிவர்த்தனையை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் சில சமயங்களில் நீண்ட நேரம் சுங்க சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 100 மீட்டர் தொலைவைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்றால் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை விட்டு செல்லலாம் என கூறியுள்ளது.