Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 100 ஸ்டாலின் வரணும்: DMKவில் 40 ஆண்டுக்கு முன்பே முழக்கம்… பெருமையாக பேசிய C.M ..!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்,  கலைஞருடைய ஆற்றல்,  ஸ்டாலினுடைய செயலில் தெரிகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை பாராட்டியவர் என்னுடைய பேராசிரியர் அவர்கள் தான். மு.க ஸ்டாலின் வருவதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வர வேண்டும் என்று என்னை மேடையிலே பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள் தான்.

வாரிசு,  வாரிசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியப்போ கல்வெட்டு போல எனக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தவரும் என்னுடைய பேராசிரியர் தான்.  அவர் சொன்னார்…  கலைஞருக்கு மட்டும் இல்லை,  எனக்கும் ஸ்டாலின் வாரிசு தான் என்று கூறி…  அடுத்த தலமுறையை பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு என்று துணிச்சலாக சொன்னவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான்…

இவை அனைத்துக்கும் மேலாக நம்முடைய பொதுச் செயலாளர் சொன்னது போல…  கழகத்தின் செயல் தலைவராக முன்மொழிந்தவரும் நம்முடைய பேராசிரியர் அவர்கள் தான்…  தலைவர் அவருடைய மறைவுக்குப் பிறகு தலைவராக என்னை  முன்மொழிந்தவரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான்.

நான் இன்று இந்த அளவுக்கு தகுதி பெற்றவனாக இருக்க காரணம் அனைத்துக்கும் காரணம் என்னுடைய பேராசிரியர் தான். இன்னும் சில ஆண்டு காலம் வாழ்வார் என்று ஆசைப்பட்டேன்.. கோப்பெருஞ்சோழன் தொடர்ந்த பிசிராந்தராரக பேராசிரியர் அவர்கள் நம்மளை விட்டு விட்டு சென்றுவிட்டார் என பெருமைப்பட பேசினார்.

Categories

Tech |