இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு உரிய ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால் தன் சொந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாட்கள் வேலை) திட்ட தொழிலாளர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் முறையில் வருகை பதிவேடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் பணி தொடர்பாகவும், வருகை தொடர்பாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.