100 நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் நடைபெற்றது.
அதில் 100 நடைபாதை வியாபாரிகளுக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் கடன் உதவித் தொகையையும், அடையாள அட்டையும் அமைச்சர் நாசர் அவர்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும், தெரிவித்தார்.