Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் வட்டப்பாத்தி அமைத்து கொடுத்ததோடு நிலங்கள் பசுந்தீவனம் பயிரிடவும் அரசு வழிவகை செய்து தருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கன்னமனைக்கனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பாக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து ஒலிபெருக்கி மூலமாக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் பயனடையும் வகையில் தனிநபர் நிலப் பகுதிகளுக்கு வரப்பு மற்றும் வட்டப்பாத்தி அமைத்து கொடுக்கப்படுகிறது.

அதன்பின் தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு, வட்ட பாத்தி அமைத்துக் கொடுத்ததோடு நிலங்களில் பசுந்தீவனம் பயிரிடவும் அரசு வழிவகை செய்கிறது. இதனைத்தொடர்ந்து மீன் வள துறையுடன் இணைந்து குட்டை அமைத்து கொடுக்கப்படுகிறது. மேலும் நிலங்களை சீர்செய்து காய்கறிகளைப் பயிரிட ஏற்ற வகையில் செடிகளை வளர்ப்பதற்கு குழிகள் எடுத்து தருதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் உபதலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் வளம் பெறும்படி கேட்டுள்ளனர்.

Categories

Tech |