தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி 100 நாட்கள் முடிவடைந்தும் நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவது அவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.
தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று காபூலைக் கைப்பற்றி ஆப்கானிஸ்தானை மறுபடியும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 40 வருடங்கள் நடைபெற்ற போர்களால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் நாட்டில் அமைதியை நிலைநிறுத்துவது அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையில் மறுபுறம் ஐ.எஸ் அமைப்பினர் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மற்றும் தலிபான்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நாட்டில் அமைதியை நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தலிபான்கள் தவித்து வருகின்றனர். கடந்த காலங்களைப் போல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க போவதில்லை என முதலில் அறிவித்தாலும் பெண் குழந்தைகள் ஆரம்ப பள்ளிக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மேல்நிலைப்பள்ளி செல்லவும், உயர் பதவிகள் வகிக்கவும் விதிக்கப்பட்டத் தடையை கண்டித்து பெண்கள் போராடி வருகின்றனர்.