பொதுமக்களின் வீடுகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளதவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் முகாமில் தடுப்பூசி இருப்பு குறித்தும் மற்றும் அதன் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். பின்னர் பொதுமக்களின் பட்டியல்களை எடுத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தாதவர்களை நேரடியாக அணுகி முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து தக்கோலம் செயல் அலுவலர் கணேசனிடம் இப்பணிகளை வரும் நாட்களில் தொடர்ந்து மேற்கொண்டு தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவற்றை வைத்து வரும் வாரங்களில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி 100% முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அரக்கோணம் நேருஜி நகர் மற்றும் பெருமாள்ராஜ் பேட்டை பகுதிகளிலும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கோவின் செயலி மூலமாக ஆய்வு செய்துள்ளார்.