23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு இலவசமாக தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் கால்நடை மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத், ஜூனத் பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனையடுத்து 23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகளை கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் தங்கராஜ், டாக்டர் பிரதிபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.