Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்புகள் 2,000-ஐ கடந்தது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 2,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாவே செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி சென்னை ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. நேற்று வரை செங்கப்பட்டில் பாதிப்புகளின் எண்ணிக்கை 1988 ஆக இருந்தது. நேற்று மட்டும் 134 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 788 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 1184 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மேலும் 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கொரோனாவுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது. பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாக சென்னையில் இருந்து மக்கள் தினமும் சென்று வருகின்றனர். இதன் காரணமாவே தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

Categories

Tech |