Categories
அரசியல்

100% தளர்வு …! ”எந்த கட்டுப்பாடும் இல்லை” மகிழ்ச்சியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் இ.பாஸ் இல்லாமல் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,  இன்றோடு மூன்றாவது பொது முடக்கம் முடிவடைய இருக்கிறது இதனிடையே இன்று 4ஆவது பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு மே 31ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகம் தற்போது மே 31ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு கொடுத்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும் என்று தெரிவித்த தமிழக அரசு 25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து சேவை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தொடர அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே 100 நாட்கள் வேலை செய்யும் செய்பவர்களுக்கு 100% கட்டுப்பாடு தளர்வு என்று தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 50 நாட்களுக்கு மேலாக வேலை இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முதல்வரின் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |