Categories
மாநில செய்திகள்

100% இருக்கைக்கு அனுமதி – மத்திய அரசு அதிரடி…!!

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து திரை அரங்குகளும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்தத நிலையில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் வெளியாக இருந்த நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று 100% அனுமதி அளித்ததை அடுத்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.

இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |