கொரோனா வைரஸ் தொற்றுநோயை 100 சதவீதம் தடுக்கக்கூடிய ஆன்டிபாடி கண்டுபிடிப்புயை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
கொரோனாவால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பயோடெக் நிறுவனம் கண்டுபிடிப்பான ஆண்டிபாடி கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்டியாகோவை தளமாகக் கொண்டு இயங்கும் சோரெண்டோ தெரபியூடிக்ஸ் பயோடெக் நிறுவனத்தின் எஸ்.டி.ஐ -1499 என்ற ஆன்டிபாடி மருந்து ஆரோக்கியமான மனித உயிரணுக்களில் கொரோனா வைரஸை நுழைவதை 100 சதவீதம் தடுத்ததுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
ஒரு மாதத்திற்கு 200,000 டோஸ் ஆன்டிபாடியை உற்பத்தி செய்ய முடியும் என்று சோரெண்டோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் ஆன்டிபாடியை தயாரிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) அவசர ஒப்புதலுக்காக மனு தாக்கல் செய்துள்ளது. இதற்க்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் சோரெண்டோவுக்கான பங்குகள் கிட்டத்தட்ட 220 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சோரெண்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹென்றி கூறும் போது, கொரோனாவுக்கு சிகிச்சை இருக்கிறது என்பதை வலியுறுத்த நாங்கள் விரும்புகிறோம். இது 100 சதவீதம் வேலை செய்யும், இதில் தீர்வு இருக்கிறது.கொரோனா வைரஸை இந்த மருந்து சுற்றி வளைக்கிறது. கொரோனாவை சுற்றிக் கொள்வதால் வைரஸ் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.
இது வைரஸை மனித உயிரணுக்களில் நுழைவதைத் தடுக்கும்போது, வைரஸால் செல்லுக்குள் செல்ல முடியாது, நகலெடுக்க முடியாது. இதனால் வைரஸ் உயிரணுக்களைப் பெறுவது தடுக்கப்பட்டு இறுதியில் இறந்துவிடும். பின்னர் உடலில் இருந்து அந்த வைரஸை வெளியேற்றுகிறது.உங்கள் உடலில் நடுநிலையான ஆன்டிபாடி இருந்தால், உங்களுக்கு சமூக விலகல் தேவை இருக்காது. நீங்கள் பயமில்லாமல் ஊரடங்கை தளர்த்த முடியும் என்று அவர் கூறினார்.