Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூறு சதவீத வாக்கு அளிக்க வேண்டும் என கூறுகிறது. மேலும் ரோபோ வைத்துள்ள கணினி பலகை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ரோபோவை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடனும்,வியப்பாகவும் பார்த்து செல்வதுடன் தங்களது மொபைலில்  செல்பி எடுத்துச் செல்கின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உருவாக்கியுள்ளதாகவும் இதன்மூலம் வாக்குப்பதிவு அதிகமாகும் என நம்புவதாகவும் ரோபோவை தயார்செய்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த ரோபோ வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |