சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் சாதித்த பெண்கள் 100 பேரின் பட்டியல் இன்று வெளியாகியிருக்கிறது.
2021 ஆம் வருடத்திற்கான டெக் 3 கருத்தரங்கு இன்று நடந்திருக்கிறது. இதில் பங்கேற்ற தொடர்பு மற்றும் தகவல் அமைச்சரான ஜோசஃபின் தியோ, இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறார். தொழில்நுட்பத்துறையில் நன்றாக பங்காற்றிய சிங்கப்பூர் பெண்களை அங்கீகரிப்பதாக SG100WIT என்னும் திட்டமானது, சிங்கப்பூர் கணினி சங்கம் மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மீடியாகார்ப் நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியான தாம் லோக் கெங் பெயரும் இப்பட்டியலில் இருக்கிறது. கடந்த 2017ஆம் வருடத்திலிருந்து, தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருக்கும் இவர், ஊடகத்தை மின்னிலக்க மயமாக்க அதிகமாக பணியாற்றியிருக்கிறார்.
நிறுவனத்திற்கான தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க, பல்வேறு தடைகளையும், சவால்களையும் எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்த வருடத்திற்கான பட்டியலில் “Girls in Tech” என்ற பெயரில் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளம் பெண்களுக்கு புதிய பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 18 மாணவிகளின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.