Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி..!” 109 கிலோ எடையா..? 100 வருடங்களை கடந்து வாழ்ந்து வந்த மீன் பிடிக்கப்பட்டது..!!

அமெரிக்காவில் ஒரு நதியில் 100 வருடங்களை தாண்டி வாழ்ந்து வரும் 109 கிலோ எடையுடைய மீன் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் பணியாளர் ஒருவர், மிச்சிகன் என்ற மாகாணத்தில் இருக்கும் டெட்ராய்ட் என்ற நதியில் ஒரு மீனை பிடித்திருக்கிறார். அது சுமார் 109 கிலோ எடையிருந்திருக்கிறது. மேலும் 6 அடி 10 அங்குலம் நீளம் இருக்கிறதாம். மேலும் இந்த மீன் ஏரி ஸ்டர்ஜன் இனத்தைச் சேர்ந்தது.

ஆராய்ச்சியாளர்கள் தற்போது வரை அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய ஏரி ஸ்டர்ஜன் மீன்களில் இதுவும் ஒன்று என்று கூறுகின்றனர். மேலும் இந்த மீனினுடைய சுற்றளவைக்கொண்டு, இது பெண் மீன் என்றும் சுமார் 100 வயதிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |