நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துளளார்.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கொரோனாவில் இருந்து விடுபட்டது குறித்து மூதாட்டி ஹல்லமா கூறும் போது, “மருத்துவர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர். வழக்கமான உணவுகளோடு, நான் தினமும் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தேன். மருத்துவர்கள் எனக்கு மாத்திரைகள் மற்றும் ஊசி போட்டார்கள், நான் இப்போது ஆரோக்கியமுடன் இருக்கிறேன்.
கொரோனா ஒரு ஜலதோஷம் போன்றது” என்று அந்த மூதாட்டி கூறியுள்ளார். சென்ற 22ம் தேதி கொரோனா பாதிப்பில் இருந்து ஹலம்மா மீீண்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூதாட்டி வெறும் 6 நாட்களில் குணமடைந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.