Categories
உலக செய்திகள்

“செஞ்சுரி அடித்த தோழிகள்!”.. நெடுநாள் நட்பு.. ஒரு வார பிறந்த நாள் கொண்டாட்டம்..!!

அமெரிக்காவில் ஒரே வருடத்தில் ஒரே மாதத்தில் பிறந்த மூன்று தோழிகளும் நூறு வயது பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்ற பகுதியில் வசிக்கும் ரூத் ஸ்வார்ட்ஸ், எடித் மிட்ஸி மாஸ்கோ மற்றும் லோரெய்ன் பிர்ரெல்லோ முவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் கடந்த 1921 ஆம் வருடத்தில் ஜூன் மாதம் பிறந்திருக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 100 வருட காலங்களாக மூன்று பேரும் தோழிகளாகவே இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் இவர்கள் மூவரின் பிறந்தநாளையும் அவர்களது பேரன் பேத்திகள் உட்பட குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்கள். தங்கள் நூறு வருட வாழ்க்கையில் பலவித மகிழ்ச்சிகள், துன்பங்கள் போன்ற அனைத்து உணர்வுகளையும் தங்கள் குடும்பத்தினரிடம் பகிர்ந்தார்கள்.

தற்போதைய சூழலில் மூவருமே கொரோனா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். இவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு வாரம் நடத்தப்பட்டது. அதில் அவர்கள் நட்பை வெளிப்படுத்தும் விதத்தில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக மூவரும் சேர்ந்து மிகப் பெரிதான கேக்கை வெட்டி மகிழ்வுடன் நிறைவு செய்தார்கள்.

Categories

Tech |