அரியலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிவனம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழைமை வாய்ந்த கோவில் இதுவாகும்.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்த கோவிலை சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பழைமை மாறாமல் சீரமைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பல்வேறு கிராமங்களை் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.