பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன திருப்பதி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாத கிணறு ஒன்று உள்ளது. மேலும் கோவிலுக்கு பெருமாள் வந்து சென்றதற்கு அறிகுறியாக பெருமாளின் பாதம் உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகின்ற புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் வருவதற்கு வசதியா சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஆட்டோ, மோட்டார் சைக்கிள், கார் போன்றவற்றில் வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும். இந்த கோவிலை தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.