1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பூரணி பொற்சிலை சிற்பங்கள் இருக்கிறது. மேலும் கீரனூர் கிராமத்தில் கிபி 10-ஆ ம் நூற்றாண்டை சேர்ந்த ராமன், சீதை சிற்பங்கள் உள்ளது. அழகிய தனித்துவம் வாய்ந்த சிற்பங்கள் இன்றும் 1000 ஆண்டுகளை கடந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் வழிபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.